விபத்தில் சிக்கியவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
அறிவாலயம் செல்லும் வழியில் விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முதல்வர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அறிவாலயம் சென்று கொண்டிருந்த போது, சாலையில் விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்துள்ளார்.
அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது சென்னை, அண்ணா சாலை, டி.எம்.எஸ் மெட்ரோ இரயில் நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சூளைமேட்டைச் சேர்ந்த திரு.அருள்ராஜ் என்பவர் சாலையில் எதிர்பாராதவிதமாக தடுமாறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதை கண்டு கான்வாய் வாகனத்தை நிறுத்தி இறங்கிச் சென்று காயமடைந்தவரை உடனடியாக ஆட்டோ ஒன்றில், சிகிச்சை மேற்கொள்வதற்காக காவலருடன் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.