பிரதமர் மோடியின் விமர்சனமும்.! முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிலும்..!

PM Modi - Tamilnadu CM MK Stalin

பிரதமர் மோடி திமுக பற்றி விமர்சனம் செய்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பதில் கூறினார்.

2024 நாடாளுமன்ற தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க ஆரம்பித்து பரபரப்பாக இயங்கி வருகிறது. 24 எதிர்க்கட்சிகள் ஒன்றாக ஆலோசனை நடத்திய அதே வேளையில், ஆளும் பாஜக 34 கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறது. பிரதமர் மோடி திமுகவை பற்றி நேரடியாக விமர்சிக்கிறார். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினும் நேரடியாக பதில் கூறுகிறார் என அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது.

நேற்று பிரதமர் மோடி அந்தமானில் பெரிதாக கட்டப்பட்ட விமான நிலைய திறப்பு விழா, ஆளும் கட்சி கூட்டணி நிகழ்வுகளில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சிகளில் பேசுகையில், எதிர்க்கட்சிகள் கூட்டம் பற்றி விமர்சித்து இருந்தார். அவர் கூறுகையில் பெங்களூரில் 2நாட்கள் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம் ஊழல்வாதிகளை பாதுகாக்க ஏற்படுத்தப்படும் கூட்டம். ஊழல்வாதிகளை ஊக்குவிக்க பெங்களூருவில் கூடுகிறார்கள். சில அரசியல் கட்சிகள் குடும்பத்திற்காக அரசியல் செய்து வருகின்றார்கள், ஊழல் வழக்குகளை சந்தித்து வரும் திமுக நல்ல கட்சி என்று நற்ச்சொன்றை எதிர்க்கட்சிகள் வழக்குகிறார்கள். என விமர்சித்து இருந்தார்.

இதற்கு பதில் கொடுக்கும் விதமாக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பெங்களூரு கூட்டம் முடிந்து தமிழ்நாடு திரும்புகையில் விமான நிலையத்தில் பேசுகையில், பாஜக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பிரதமரால் குற்றம் சாட்டப்பட்ட, அவரால் ஊழல்வாதிகள் என்று கூறப்பட்ட பலர் அவர் அருகில் இருக்கிறார்கள். இந்த நிலையில் பிரதமர் இதனை சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. மேலும் பாஜக கூட்டணியில் இருப்பவர்கள் மீதான வழக்குகளை அமலாக்கத்துறை கண்டும் காணாமல் இருக்கிறது இதுவே பிரதமரை பொறுத்தவரை நியாயமான ஒன்று என தனது பதிலை முதல்வர் கூறியிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்