சர்வதேச புத்தகத் திருவிழா: 30 நூல்களை வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
சர்வதேச புத்தகத் திருவிழாவில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட 30 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.
சென்னை: 3-வது பன்னாட்டு புத்தக திருவிழாவை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அமைச்சர் தா.மோ அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கடந்த 16ம் தேதி முதல் இன்று (18ம் தேதி வரை) இந்த பன்னாட்டு புத்தக திருவிழா நடைபெறுகிறது.
இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று 18-ஆம் தேதி பகல் 11.30 மணி அளவில் புத்தகத் திருவிழா நிறைவு விழா நடைபெறவுள்ளது. இந்த நிறைவு விழாவில் தமிழ்நாடு மு.க.ஸ்டாலின் பங்கேற்று நூல்கலை வெளியிட்டு விருதுகளை வழங்கி நிறைவு விழா உரையாற்றுகிறார்.
அதன்படி, 166 தமிழ் புத்தகங்கள் 32 மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பெரியாரின் கருத்துக்கள் 16 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. தமிழில் இருந்து பிற மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட 30 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் வெளியிட உள்ளார்.
இதனிடையே, கண்டோன்மெண்ட் – பட்ரோடு அண்ணா சிலை அருகில் இன்று பகல் 11.30 மணியளவில் மாபெரும் வரவேற்பு அளித்திட வேண்டும் என்று மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.