மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சேலம்: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அணையின் வலது கரையில் உள்ள மதகுகளை மின் விசையால் இயக்கி முதல்வர் தண்ணீரை திறந்து வைத்துள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் 3வது முறையாக மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்காக 90 ஆண்டுகளில் 19வது முறையாக ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தற்போது, முதற்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சுமார் 17.37 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.