சிங்கப்பூர் சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் சென்றடைந்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க இன்று முதல் 9 நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் மேற்கொண்டார். இன்று சிங்கப்பூர், ஜப்பான் பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விமான நிலையம் செல்வதற்கு முன்பாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
இதன்பின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் செல்கிறேன். முதலீடுகளை ஈர்க்க 9 நாள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று முக்கிய தொழிலதிபர்களை சந்திக்கவுள்ளேன் என தெரிவித்தார்.
இந்த நிலையில், தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் சென்றடைந்தார். அவருடன், துர்கா ஸ்டாலின் மற்றும் சில அதிகாரிகள் உடனிருந்தனர். இதனையடுத்து இன்று மாலை நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார்.