அறிஞர் அண்ணா தோட்டத்தில் பூத்த மலர் தான் கலைஞர்.! சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை.!

MK Stalin

சேலத்தில் 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சேலத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வைத்தார். சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் சுமார் 170 கோடி மதிப்பீட்டில் 50,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், 1,367 கோடி ரூபாயில் ஏற்கனவே முடிவுற்ற அரசு திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார். அதன் பிறகு 235 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டங்களை துவங்கி வைத்த பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,  சேலத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து அதன் பின்னர் மனநிறைவுடன் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். கருணாநிதி திரைத்துறையில் முழுநேர வசன கர்த்தாவாக மாறியது சேலத்தில் தான். மார்டன் தியேட்டர் உரிமையாளர் தான் கலைஞருக்கு 500 ரூபாய் சம்பளம் வழங்கினார் எனவும், பேரறிஞர் அண்ணாவின் பூங்காவில் பூத்த மலர்தான் கலைஞர் எனவும் பேசினார்.

அடுத்ததாக, திமுக ஆட்சியில் சேலத்தில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் பேசினார். சேலத்தில் ரூபாய் 880 கோடி செலவில் ஜவுளிப்பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த விழாவில் உறுதியளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்