சங்கரய்யா உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி.!

Published by
மணிகண்டன்

இந்திய விடுதலைக்காக போராட்டத்தில் ஈடுபட்ட சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா இன்று காலை 9.30 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

சென்னை, பசுமைவழிச்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். உடன், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சேகர்பாபு, தாமோ.அன்பரசன், திமுக எம்பி ஆ.ராசா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்!

தனது படியை இடையில் நிறுத்தி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு பல்வேறு முறை சிறை சென்றவர் சங்கரய்யா. 1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கிய போது இருந்த 36  தலைவர்களில் சங்கரய்யாவும் முக்கியமானவர். அதன் பிறகு 1967 மற்றும் 1977,1980 ஆகிய தேர்தலில் மதுரை மேற்கு மற்றும் கிழக்கு தொகுதிகளில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சங்கரய்யா.

உடல்நல குறைவால் உயிரிளந்த சங்கரய்யா உடலானது தனியார் மருத்துவமனையில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன் பிறகு தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

13 நாடுகளில் தேதி குறிச்சாச்சி: வயசாகிடுச்சுன்னு நினைக்காதீங்க… இனி தான் ஆரம்பமே – இளையராஜா நெகிழ்ச்சி!

சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…

59 minutes ago

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக படுதோல்வி..கோப்பையை வென்றபிறகு பேசிய விராட் கோலி!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…

1 hour ago

LIVE: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு முதல் சாதனை செய்த இளையராஜா வரை!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…

2 hours ago

பாஜகவுடைய ஏவலால் பல கட்சிகள் நம்மளை குறைகூறுகிறார்கள்! அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!

சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…

2 hours ago

வடசென்னை 2 வருது…வருது! மாற்றி மாற்றி பேசும் வெற்றிமாறன்…டென்ஷனில் ரசிகர்கள்!

சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…

4 hours ago

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு! தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனை பற்றி பேச எதிர்க்கட்சிகள் திட்டம்!

டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…

4 hours ago