சங்கரய்யா உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி.!
இந்திய விடுதலைக்காக போராட்டத்தில் ஈடுபட்ட சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா இன்று காலை 9.30 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
சென்னை, பசுமைவழிச்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். உடன், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சேகர்பாபு, தாமோ.அன்பரசன், திமுக எம்பி ஆ.ராசா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்!
தனது படியை இடையில் நிறுத்தி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு பல்வேறு முறை சிறை சென்றவர் சங்கரய்யா. 1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கிய போது இருந்த 36 தலைவர்களில் சங்கரய்யாவும் முக்கியமானவர். அதன் பிறகு 1967 மற்றும் 1977,1980 ஆகிய தேர்தலில் மதுரை மேற்கு மற்றும் கிழக்கு தொகுதிகளில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சங்கரய்யா.
உடல்நல குறைவால் உயிரிளந்த சங்கரய்யா உடலானது தனியார் மருத்துவமனையில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன் பிறகு தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.