மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில், பங்காரு அடிகளார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் தமிழிசை, டாக்.ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று அவரது அஞ்சலி செலுத்தினர். ஆன்மீக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அங்கு 2500- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், பங்காரு அடிகளார் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். முதல்வருடன் அமைச்சர் துரைமுருகன், கே.என்.நேரு பொன்முடி, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த பங்காரு அடிகளார் சேவையை போற்றும் வகையில் அரசு மரியாதை உடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…