முகசிதைவு நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் சிறுமி டான்யா வீட்டிற்க்கு நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று ஓய்வில் இருக்கும் சிறுமி டான்யாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை, ஆவடியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் – சௌபாக்கியா தம்பதியரின் மூத்த மகள் தான் 9 வயதான சிறுமி டான்யா. இவர் கடந்த ஆறு வருடங்களாக அரிய வகை முகச்சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மூன்று வயதுக்கு பிறகு டான்யாவின் முகத்தில் ஏற்பட்ட சிறிய கட்டி வளர்ந்து பெரியதாகி ஒரு பக்க முகத்தை சிதைத்து விட்டது.
உதவிகேட்ட சிறுமி டான்யா : இதனை அடுத்து அவர்கள் மருத்துவர்களை சந்தித்து ஆலோசித்த பிறகு தான் சிறுமி டான்யா முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை சரி செய்ய நிறைய பணம் செலவாகும் என்பதால், உதவி கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சிறுமி டான்யா மற்றும் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.
முதல்வரின் உடனடி நடவடிக்கை : இந்த கோரிக்கையை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்ததன் பெயரில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்கு பிறகு மீண்டும் ஒரு சிகிச்சை முடிந்து தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் சிறுமி டான்யா.
நேரில் நலம் விசாரிப்பு : வீட்டில் ஓய்வில் இருக்கும் சிறுமி டான்யாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேராக அவரது வீட்டுக்கே சென்று நலம் விசாரித்தார். அப்போது சிறுமியுடன் கலந்துரையாடியனார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும் அவர்களது பெற்றோர்களிடம் சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்து கொண்டார்.