அனைத்து தொழில் நிறுவனங்களையும் ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.! முதல்வர் பெருமிதம்.!
இன்று ஜவுளித்துறை கருத்தரங்கு நடைபெற்றது. அதில், முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் கலந்துகொண்டார்.
மத்திய அரசின் ஜவுளி துறை மற்றும் தமிழக அரசின் ஜவுளி துறை இணைந்து இன்று சென்னையில் தொழில் முனைவோர் கருதரங்கு நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் கலந்துகொண்டார்.
அதில் பேசுகையில், ஜவுளி நகரம் சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் 6 கூட்டுறவு நூற்பாலைகளில் பணியாற்றி வரும் நிரந்தர பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும். 3 கூட்டுறவு நூற்பாலைகளுக்கு 11 கிலோ வாட் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜவுளித்துறைக்கு புதிய எந்திரங்கள் கொள்முதல் செய்து நவீனப்படுத்த 29.34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் குமாரலிங்கபுரம் கிராமத்தில் ஜவுளி நகரம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் சிப்காட் முயற்சி செய்து வருகிறது.
பன்னாட்டு கருத்தரங்கள் மூலம் கல்வி, பொருளாதாரம், மனிதவளம் ஆகியவைகளில் இந்தியாவுக்கு தமிழகம் முதன்மையான மாநிலமாக திகழ்கிறது. நாட்டின் மொத்த ஜிடிபியில் இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழகம் உள்ளது.
மாநிலத்தில் இருக்கும் 2,53,500 கிமீ சாலை வசதிகள் இருப்பதால் தொழில் வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவிகரமாக இருக்கிறது. மாநிலத்தில் 80 விழுக்காடு கல்வி அறிந்த மக்கள் வசிக்கும் மாநிலம் தமிழகம். அனைத்து துறைகளிலும் நாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். நமது ஆட்சி தான் புதியதாக ஜவுளித்துறை எனும் துறையை அறிமுகப்படுத்தினோம். தமிழக அரசின் தொழில்துறை மூலமாக சிறப்பு முதலீட்டாலர்களுக்கு 1.50 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது.
இந்திய ஜவுளித்துறையில் 12 விழுக்காடு ஜவுளி வளர்ச்சி தமிழகத்தில் தான் இருக்கிறது. 1866 நூற்பாலைகள் தமிழகத்தில் இருக்கின்றன. நாட்டின் விசைத்தறிகளில் தமிழகத்தில் 23 சதவீத விசைத்தறிகள் இருக்கின்றன. 30 லட்சத்திற்கும் அதிமானோருக்கு ஜவுளித்துறை மூலம் வேலைவாய்ப்பு வழங்கபட்டு வருகிறது. நாட்டில் வளர்ந்து வரும் மிக முக்கிய பிரிவு ஜவுளி துறை என்பதையும், அதில் புது புது தொழில்நுட்பங்கள் புகுத்தவேண்டும் எனப்தையும் தமிழக அரசு அறியும். மாமல்லபுரத்தில் 30 கோடி மதிப்பீட்டில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்கபட உள்ளது. என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்தரங்கில் பேசினார்.
இந்த கருத்தரங்கில் காணொளி மூலம் முதல்வர் கலந்துகொண்டார். அமைத்ச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பரசு , காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.