கள ஆய்வில் சில திட்டங்கள் தாமதமாக செயல்படுவது கண்டறியப்பட்டது.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.!

Published by
மணிகண்டன்

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வேலூர் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை 4 மாவட்ட ஆட்சியர் உடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் கள ஆய்வில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வுகளை இன்று மேற்கொண்டு வருகிறார். காலையில் வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் வழங்கப்படும் காலை சிற்றுண்டியை ஆய்வு செய்தார். தொடர்ந்து பல்வேறு பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார்.

பிறகு, வேலூர் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை 4 மாவட்ட ஆட்சியர் உடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,  குறைகள் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் கூட்டப்பட்ட கூட்டமல்ல. மக்கள் நலம் காக்க இந்த ஆலோசனை கூட்டம் கூட்டப்படுகிறது.

இந்த ஆய்வின் மூலம், சுணக்கம் (தாமதம்) ஏற்படும் திட்டங்கள் , செயல்பாடுகள் அடையாளம் காணப்பட்டன. அதனை சரி செய்ய வேண்டும். இதன் மூலம் நிர்வாகம் மேம்பட வேண்டும். அரசு அதிகாரிகள் தங்கள் பணி இடையூறுகளை கண்டறிய வேண்டும். பின்னர் அதனை குறைக்க வழிவகை செய்ய வேண்டும். உங்கள் பணியில் உள்ள குறைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.  என தெரிவித்தார்.

மேலும், இந்த ஆய்வின் மூலம் நாம் அறிவித்த திட்டங்களில் 80 சதவீதம் பணிகள் நிறைவேற்றியுள்ளோம். அது அதிகாரிகள் எல்லோருடைய ஒத்துழைப்புடன் நடைப்பெற்றுள்ளது. அதற்கு நன்றி என தெரிவித்தார். மக்களின் அடிப்படை வசதி, பட்டா மாறுதல் போன்ற விவகாரங்கள், விளிம்புநிலை மக்களின் நிலை குறித்து துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு திட்டங்கள் நிதி தேவை பற்றாக்குறை இருந்தால் துறை தலைவர்கள் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மண்டலத்துக்கே நேரடியாக வந்து ஆலோசித்த இந்த கள ஆய்வு திருப்திஅளிக்கிறது. எல்லோரையும் ஒருசேர சந்திபப்து மிக முக்கியமானது. யாரும் தனியாக செயல்பட முடியாது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மக்கள் பணிகள் தாமதப்படுத்தப்பட்டால் மாவட்ட ஆட்சியாளர்கள் கண்டறிந்து அதனை களைய வேண்டும். திட்டங்களுக்கான நிதி வீணாக்காமல் சிக்கனமாய் செலவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அதனை முடிக்க வேண்டும். சுணக்கமாக திட்டம் செயல்பட்டால் அது அரசின் மீதான விமர்சனம் வைக்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!  

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

7 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

8 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

10 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

11 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

11 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

1 day ago