கள ஆய்வில் சில திட்டங்கள் தாமதமாக செயல்படுவது கண்டறியப்பட்டது.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.!
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வேலூர் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை 4 மாவட்ட ஆட்சியர் உடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் கள ஆய்வில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வுகளை இன்று மேற்கொண்டு வருகிறார். காலையில் வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் வழங்கப்படும் காலை சிற்றுண்டியை ஆய்வு செய்தார். தொடர்ந்து பல்வேறு பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார்.
பிறகு, வேலூர் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை 4 மாவட்ட ஆட்சியர் உடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், குறைகள் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் கூட்டப்பட்ட கூட்டமல்ல. மக்கள் நலம் காக்க இந்த ஆலோசனை கூட்டம் கூட்டப்படுகிறது.
இந்த ஆய்வின் மூலம், சுணக்கம் (தாமதம்) ஏற்படும் திட்டங்கள் , செயல்பாடுகள் அடையாளம் காணப்பட்டன. அதனை சரி செய்ய வேண்டும். இதன் மூலம் நிர்வாகம் மேம்பட வேண்டும். அரசு அதிகாரிகள் தங்கள் பணி இடையூறுகளை கண்டறிய வேண்டும். பின்னர் அதனை குறைக்க வழிவகை செய்ய வேண்டும். உங்கள் பணியில் உள்ள குறைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். என தெரிவித்தார்.
மேலும், இந்த ஆய்வின் மூலம் நாம் அறிவித்த திட்டங்களில் 80 சதவீதம் பணிகள் நிறைவேற்றியுள்ளோம். அது அதிகாரிகள் எல்லோருடைய ஒத்துழைப்புடன் நடைப்பெற்றுள்ளது. அதற்கு நன்றி என தெரிவித்தார். மக்களின் அடிப்படை வசதி, பட்டா மாறுதல் போன்ற விவகாரங்கள், விளிம்புநிலை மக்களின் நிலை குறித்து துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு திட்டங்கள் நிதி தேவை பற்றாக்குறை இருந்தால் துறை தலைவர்கள் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மண்டலத்துக்கே நேரடியாக வந்து ஆலோசித்த இந்த கள ஆய்வு திருப்திஅளிக்கிறது. எல்லோரையும் ஒருசேர சந்திபப்து மிக முக்கியமானது. யாரும் தனியாக செயல்பட முடியாது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மக்கள் பணிகள் தாமதப்படுத்தப்பட்டால் மாவட்ட ஆட்சியாளர்கள் கண்டறிந்து அதனை களைய வேண்டும். திட்டங்களுக்கான நிதி வீணாக்காமல் சிக்கனமாய் செலவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அதனை முடிக்க வேண்டும். சுணக்கமாக திட்டம் செயல்பட்டால் அது அரசின் மீதான விமர்சனம் வைக்கப்படுகிறது.