தொடர்ந்து சிக்சர் அடித்து வரக்கூடிய எங்கள் அணி கேப்டன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – அமைச்சர் உதயநிதி
தொடர்ந்து சிக்சர் அடித்து வரக்கூடிய எங்கள் அணி கேப்டன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் உதயநிதி பேரவையில் பேச்சு
இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டபேரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரவையில் உரையாற்றினார்.
கேப்டன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அப்போது பேசிய அவர், எந்த பந்தை அடிக்க வேண்டும், எந்த பந்தை அடிக்கக் கூடாது என சொல்லிக் கொடுத்தவர் எங்கள் முதலமைச்சர்; எப்போது டிபென்ஸ் ஆட வேண்டும், எப்போது அடித்து ஆட வேண்டுமென எங்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார். ஆன்லைன் ரம்மிக்கு எதிராக நேற்று ஒரு சிக்சரும், டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் விவகாரத்தில் மேலும் ஒரு சிக்சர் என தொடர்ந்து சிக்சர் அடித்து வரக்கூடிய எங்கள் அணி கேப்டன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கலைஞர் நின்று வென்ற எனது சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், கலைஞர் எந்த இடத்தில் அமர்ந்து விளையாட்டை பார்த்து ரசித்தாரோ அதே இடத்தில் காலரி அமைத்து, அதற்கு கலைஞர் பெயரை சூட்டி, நமது முதலமைச்சர் திறந்து வைத்திருக்கிறார் என தெரிவித்துள்ளார்.