பழ.நெடுமாறனை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

PazhaNedumaran and cm

உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவரும் பழ.நெடுமாறனை அவரது இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துள்ளார்.

பழ.நெடுமாறன் உடல் நிலை 

உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் விபத்து ஒன்றில் சிக்கியதால் கைகால்கள் முறிவு ஏற்பட்டு தற்போது மதுரையில் இருக்கும் தன்னுடைய வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இவருடைய உடல் நிலை குறித்து பல அரசியல் தலைவர்களும் நேரில் சென்று சந்தித்து ஆறுத்தல்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து பழ.நெடுமாறன் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

உடல்நலம் குறித்து விசாரித்தார் முதலமைச்சர்

அவரை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன்னிற்கு செல்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மதுரை வந்திருந்தார். அப்போது உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வாசிக்க கூடிய வீட்டிற்கு நேரில் சென்று அவருடைய உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

சந்தித்து அவருடைய உடல் நலம் கேட்டுவிட்டு மு.க.ஸ்டாலின் பழ.நெடுமாறனுக்கு ஆறுதலை தெரிவித்தார். இதன் பிறகு சில புத்தகங்களை பழ.நெடுமாறன் முதல்வருக்கு பரிசாக கொடுத்தார். இந்த சம்பவம் நடைபெற்றபோது மு.க.ஸ்டாலின்  உடன் வந்த அமைச்சர்கள் சிலரும் இருந்தார்கள்.

பழ.நெடுமாறன் நெகிழ்ச்சி 

முதல்வர் ஸ்டாலின் சந்தித்துவிட்டு சென்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பழ.நெடுமாறன் ” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு பணிகளுக்கு இடையில் உடல் நலம்குன்றி இருக்கும் என்னை நேரில் வந்து பார்த்து நலம் விசாரித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போது மட்டுமில்லை இதற்கு முன்பாகவும் பலமுறை என் மீது அன்பும், மரியாதையையும் காட்டி இருக்கிறார். அதைப்போல இந்த முறையும் அவர் அவருடன் வந்த அமைச்சர்கள் என்னை நேரில் பார்க்க வந்தது மகிழ்ச்சி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என் உடல் நலம் குறித்து விசாரித்தது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தருகிறது ,  ” எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்