சர்ப்ரைஸ்.! டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Published by
மணிகண்டன்

முதல்வர் மு.க.ஸ்டாலின் 8 நாள் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள பன்னாட்டு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க எதுவாக உள்ள சூழ்நிலைகளை விவரித்து அவர்களை தொழில் தொடங்க தொழில் விரிவுபடுத்த தமிழகம் வரவேண்டும் என கேட்டுக்கொள்ள உள்ளார்.

ஸ்பெயினில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு… முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு!

இது தொடர்பாக , இன்று ஸ்பெயினில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். அதன்படி, இந்த மாநாட்டில் பல்வேறு முதலீட்டாளர்களைச் சந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான், தற்போது டென்னிஸ்விளையாட்டு ஜாம்பவான் வீரர் ஜோகோவிச்சை (Djokovic) முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்த புகைப்படத்தை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் பகிர்ந்துள்ளார். அதில், ” ஸ்பெயின் நாட்டின் பயணத்தின் பொது, டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சை சந்தித்தது எதிர்பாரா மகிழ்ச்சியை அளித்துள்ளது.” என பதிவிட்டுள்ளார்.

டென்னிஸ் வீரர் ஜோகோவிச், டென்னிஸ் உலகில் மிக உயரிய கோப்பைகளில் ஒன்றாக கருதப்படும் கிராண்ட் ஸ்லாம் கோப்பையை  24 முறை வென்றுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Recent Posts

ராமதாஸ் குறித்து முதல்வர் விமர்சனம் : தமிழிசை, அண்ணாமலை கடும் கண்டனம்!

சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…

29 minutes ago

2.40 கோடி தான்..! சென்னை அணிக்கு மீண்டும் திரும்பினார் ‘சுட்டி குழந்தை’ சாம் கரன்!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…

41 minutes ago

சென்னை, திருச்சி மாவட்டங்களில் 27-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு – பாலசந்திரன் பேட்டி!

இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…

1 hour ago

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால் விடுதலை அடைய முடியாது – கனிமொழி!

சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…

1 hour ago

காரசாரமான புளி மிளகாய் செய்வது எப்படி?.

சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய்  ரெசிபியை  ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…

1 hour ago

ஏலியன்களால் கடத்தல்? 3000 ஆண்டுகளுக்கு முன்பே ‘X’ தள கணக்கு தொடங்கிய மஸ்க்!

ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…

2 hours ago