கள ஆய்வு: பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்தில் திடீர் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார். அங்கு, அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்நிலையில், விழுப்புரம் கள ஆய்வுக்கு செல்லும் வழியில், செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, அரசு மறுவாழ்வு இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார். மேலும், அங்கு இருந்த தொழு நோய் மையத்தில் இருப்பவர்களின் நிறைகுறைகளை கேட்டறிந்தார். பின்னர், அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.