இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை திறந்து வைக்கப்பட உள்ளது. இந்த விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு அழைப்பு விடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி புறப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
அப்போது நேற்று முதல்வர் டெல்லி செல்லவிருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக விமானம் தாமதமான நிலையில், சென்னை விமான நிலையத்தில் 1 மணி நேரம் காத்திருந்து வீடு திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இதனை தொடர்ந்து இன்று காலை மீண்டும் சென்னை விமான நிலையம் வந்து, தற்போது தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். டெல்லி சென்று, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளார்.
கடலூர் : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெறவுள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில்…
சீனா : வெற்றி படம் என்றால் இப்படி இருக்கணும் என்கிற வகையில், மகாராஜா படம் பெரிய உதாரணமாக அமைந்துள்ளது. ஏற்கனவே, தமிழ்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதிகளில்…
இங்கிலாந்து : 'காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்' என்ற வரிகளுக்கு ஏற்ப நியூசிலாந்து அணியின் முன்னாள்…
மும்பை : நேற்று (நவம்பர் 27) மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில், பிரதமர்…
கடலூர் மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதன் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம்…