தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார வாகன தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
கடந்த மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் படி தூத்துக்குடியில் வியட்நாம் நாட்டைச் சோ்ந்த வின் ஃபாஸ்ட் என்ற நிறுவனம் மின்சார கார் தொழிற்சாலை அமைக்க முதலமைச்சர். மு க ஸ்டாலின் முன்னிலையில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொழுத்தனது.
இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி சில்லாநத்தம் பகுதியில் உள்ள சிப்காட் வளாகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வின் ஃபாஸ்ட் நிறுவனம் அமைக்க உள்ள தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், கடந்த டிசம்பர் மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்றது.
இந்த தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழாவில் எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவினர் கலந்துகொண்டனர். அவரின் தூத்துக்குடி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…