திமுக அரசு ஈவு இரக்கமில்லாமல் மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகக் ஈபிஎஸ் குற்றச்சாட்டி உள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர், தற்போதைய எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக கட்சியினர், இன்று ஆளும் திமுகவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி அவர்கள், திமுக அரசு பொறுப்பேற்று 14 மாதங்களில் மக்கள் பட்ட துன்பங்கள் ஏராளம். எனவே தான் இந்த போராட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் அதிமுக நடத்திய போராட்டத்தைப் பார்த்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடுங்கிகே கொண்டிருக்கிறார்.
அதிமுகவிற்கு மக்கள் செல்வாக்கை மறைக்கக் கட்சி நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் போட்டு வருகின்றனர். உங்கள் ஆட்சி அதிகாரம் எதிர்க்கட்சியை அழிப்பதற்கு அல்ல, மக்களுக்கு நன்மை செய்வதற்கானது என தெரிவித்தார். மேலும், நாட்டு மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக எனவும், வீட்டு மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி திமுக. திமுக அரசு ஈவு இரக்கமில்லாமல் மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகக் குற்றச்சாட்டி உள்ளார்.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…
டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…
மும்பை : கங்குவா திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் ரீதியாகச் சாதனை படைக்கும் எனப் படக்குழு மிகவும்…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…