கள ஆய்வில் முதலமைச்சர்.! இன்று விழுப்புரம் வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார்.
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்றும், நாளையும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு கள ஆய்வு செய்ய உள்ளார்.
இந்நிலையில், இன்று விழுப்புரம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய நேரில் வருகை தர இருக்கிறார். அரசின் திட்டங்கள், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து இன்று விழுப்புரத்திலும், நாளை 27ம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
மேலும், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை காவல்துறை அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஆய்வுகளுடன் விவசாய சங்க பிரதிநிதிகளுடனும் பேசுகிறார்.