2000 கோடியில் 44 புதிய மருத்துவமனை கட்டடங்கள்… முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கம்.!

Default Image

இன்று தமிழகம் முழுவதும் 44 மருத்துவமனை கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.  

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று, தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார் இந்த விழாவில் தமிழகத்தில் புதியதாக கட்டப்பட உள்ள மருத்துவ கட்டடங்களுக்கான பணிகளை தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்வானது, சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 44 புதிய மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும், சுகாதாரத்துறைக்கான பணி நியமன அணைகளையும், மற்றும் பல்வேறு திட்டங்களையும் முதல்வர் வழங்க உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்