கள ஆய்வில் முதல்வர் எனும் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கள ஆய்வில் முதல்வர் எனும் திட்டத்தின் கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் அவைகள் முறையாக மக்களுக்கு சென்றடைகிறதா என்பது குறித்தும் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்.
வட்டாச்சியர் அலுவலகத்தில் சோதனை : அந்த வகையில் தற்போது சேலம் மாவட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்துள்ளார். இன்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் வந்த அவர் , ஓமலூரில், உள்ள தனி வட்டாச்சியர் அலுவலகத்தில் சோதனை செய்து வருகிறார். இந்த சோதனையை நிறைவு செய்த பிறகு பொதுமக்களை சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டறிய உள்ளார்.
விவசாய சங்கதினர் : இந்த நிகழ்வை தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அங்கு சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 4 மாவட்ட விவசாய சங்கதினரையும், தாட்கோ திட்ட பயணிகளையும் சந்திக்க உள்ளார். அவர்களிடம் மத்திய மாநில அரசு திட்டங்கள் முறையாக வந்து சேருகிறதா.? அதில் உள்ள குறைகளை முதல்வர் கேட்டறிய உள்ளார்.
சட்டம் ஒழுங்கு : இதனை தொடர்ந்து நாளை , சட்டம் ஒழுங்கு பற்றிய ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அதில், 4 மாவட்ட காவல் உயர் அதிகாரிகள், சேலம் சரக டிஐஜி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அதனை தொடர்ந்து வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…