சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
காணொலிக் காட்சி வாயிலாக சுதந்திர போராட்ட தியாகிகளின் சிலைகளை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில்அரசு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களுக்கு ரூ.34 லட்சத்திலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ரூ.18 லட்சத்திலும், ரூ.43 லட்சத்தில் வ.உ.சிதம்பரனார் கோவை சிறையில் இழுத்த செக்கு பொலிவூட்டப்பட்ட சிலையும், அவரது மார்பளவு சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக சுதந்திர போராட்ட தியாகிகளின் சிலைகளை திறந்து வைத்தார்.