மணல் சிற்பத்தினை முதல்வர் திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
சென்னை மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மெரினா கடற்கரையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கவும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தமிழக அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த மணல் சிற்பத்தை திறந்து வைத்தார். அந்த மணல் சிற்பத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம் என எழுதப்பட்டிருந்தது.