40 ஆண்டுகால வரலாற்று நிகழ்வுகளை பிரதிபலிக்கும் புகைப்பட கண்காட்சி.! முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.!
சென்னையில் லலித் கலா அகாடமியில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமியில்தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் புகைப்பட கண்காட்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து அறிய பல புகைப்படங்களை பார்வையிட்டு வருகிறார்.
40 ஆண்டுகால நிகழ்வுகள் : அந்த புகைப்பட கண்காட்சியில் கடந்த 40 ஆண்டுகாலத்தில் தமிழக அரசியலில் ஏற்பட்ட நிகழ்வுகள் புகைப்படங்களாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதில் பேரறிஞர் அண்ணா , கலைஞர் கருணாநிதி என தமிழக ஆளுமை அரசியல் தலைவர்களின் முக்கிய நிகழ்வுகள் அதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதே போல, தமிழத்தில் அரசியல் தலைவர்களின் இறப்புகள், சுனாமி , வெள்ள பாதிப்புகள் என பல்வேறு நிகழ்வுகள் அதில் இடம்பெற்றுள்ளன .
ஒருவார கண்காட்சி : இந்த கண்காட்சியானது இன்று முதல் ஆரம்பித்து அடுத்த 7 நாட்கள் (ஒரு வாரம்) நடைபெற உள்ளது. காலை 7 மணிமுதல் ஆரம்பித்து, மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கு கட்டணம் எதுவும் இல்லை. அனைவர்க்கும் அனுமதி இலவசம். இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.