சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழாவை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
சென்னை தீவுத்திடலில் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை தீவுத் திடலில் தமிழ் வளர்ச்சி, கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னை சங்கமம் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது தொடங்கி வைத்தார்.
இந்த விழாவானது, நாளை முதல் சென்னையில் உள்ள பூங்கா மற்றும் விளையாட்டு திடல்கள் என 18 இடங்களில் தமிழக பாரம்பரிய மயிலாட்டம், பறை, சிலம்பாட்டம், தெருக்கூத்து, கானா உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இன்று தொடங்கிய இந்த கலை நிகழ்ச்சிகள் ஜனவரி 17ஆம் தேதி வரையில் நடைபெறும். இன்றைய விழாவானது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒருங்கிணைப்பில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 600க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் விழாவில் பங்கேற்றனர்.