சென்னை புறநகர் செல்ல வேண்டுமாயினும், தமிழகத்தின் எந்த ஊர்களுக்கு செல்ல வேண்டுமாயினும் சென்னை மக்கள் கோயம்பேடு பெருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை தான் இருந்தது. இதனால் அப்பகுதியில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்பட்டு வந்தது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு வண்டலூரை அடுத்த கிளம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையாயத்தை கட்டி முடித்துள்ளது.
அயோத்தியில் பிரதமர் மோடி.! ரூ.15,700 கோடிக்கு திட்டங்கள்.. புத்தம புது ஏர்போர்ட்.. ரயில் நிலையம்…
393.74 கோடிரூபாய் செலவீட்டில், 59.86 ஏக்கரில் புதியதாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தின்சோதனை ஓட்டம் கடந்த 12ஆம் தேதி நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
மேலும், பேருந்து நிலையம் உள்ளே மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உருவ சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. அதனையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் கொடியசைத்து வைத்து முதல் பேருந்து சேவையும் தொடங்கினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், திமுக எம்பி டி.ஆர்.பாலு, மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் SETC பேருந்துகள் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஒரே நாளில் 2310 பேருந்துகள் இயக்கப்படும் அளவுக்கு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த பேருந்து நிலையத்தில் மின்தூக்கிகள் (லிப்ட்), நகரும் படிக்கட்டுகள், தாய்மார்கள் பாலூட்டும் அறைகள், பயணிகள் – ஓட்டுநர் – நடத்துனர் தங்கும் அறைகள் , பல்வேறு கடைகள் அடங்கிய தரைதளம், முதல்தளம் என இரண்டு தளங்களில் பேருந்து நிலையம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையத்தில் தென்மாவட்டத்திற்கு செல்லும் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட உள்ளன. அதே போல புறநகர் பேருந்துகள் பேருந்து நிலையம் உள்ளே வரை செல்லும் வகையிலும், 2000 இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடவசதி ஆகியவை பெரியளவிலும் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…