நான் முதல்வன் திட்டம்.! 4 மாவட்ட ஆட்சியாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.!
4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
கள ஆய்வில் முதல்வர் எனும் திட்டத்தின் கீழ் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறும் அரசு திட்டங்கள் தொடர்பாக முதல்வர் இன்றும் நாளையும் முக்கிய அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இன்று காலை சேலம் வந்ததும் ஓமலூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
முதல்வர் ஆய்வு : அதனை தொடர்ந்து சேலத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் ஈரடுக்கு நவீன பேருந்து நிலையத்தை முதல்வர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அதன் பிறகு, தற்போது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களோடு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
நான் முதல்வன் : அதில் அந்தந்த மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களின் திறனை மேம்படுத்த அறிமுகப்படுத்தப்பட நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையில் தெறிந்து கொண்டார். அந்த மாணவர்களுக்கு உரிய சலுகைகள் கிடைக்கிறதா? சிறப்பு முகாம்கள் மூலம் எத்தனை மாணவர்கள் பயன்பெற்றார்கள் என்பது குறித்தும் ஆலோசித்தார்.
அதனை அடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய சங்கத்தினர், தொழில் முனைவோர் அகியோரிடம் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகள் கேட்டறிந்து ஆய்வு செய்ய உள்ளார்.