இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடந்த 7ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி , கடந்த 12ஆம் தேதி சிறைபிடித்தனர். தமிழக மீனவர்களான ரவி, ஆனந்தமணி, ராஜா, வீரையன் மகன் ரவி, மதிபாலன், காத்தலிங்கம், ராமமூர்த்தி, அன்பு, வேல்மயில், ரகு, தினேஷ், சித்திரைவேல் உள்ளிட்டோர் கடந்த ஏழாம் தேதி மீன்பிடிக்க சென்றனர்.
தமிழக மீனவர்கள் கைது :
அவர்கள் கடந்த 12ஆம் தேதி வேதாரண்யம் அருகே கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்தனர்.
மு.க.ஸ்டாலின் கடிதம் :
இந்த கைது நடவடிக்கை தொடர்ந்து மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 16 மீனவர்கள் விசைப்படகுருடன் இலங்கை கடற்படையினரால் கடந்த 12ஆம் தேதி சிறை பிடிக்கப்பட்டனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். ஒரு மாதத்தில் மட்டும் இது மூன்றாவது சம்பவமாகும்.
இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க தூதரகம் வாயிலாக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…