மழை பாதித்த பகுதிகளை மூத்த அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!
மழை பாதித்த பகுதிகளை மூத்த அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த மலையானது, கடந்த 25 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் பெய்த இரண்டாவது மிகப்பெரிய அளவிலான மழை அளவாகும்.
தற்போது மழையின் அளவு குறைந்துள்ள காரணத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மலைநடவடிக்கை குறித்து தற்போது தமிழக முதல்வர் ஒரு முக்கிய அறிவிப்பை அமைச்சர்களுக்கு விடுத்துள்ளார்.
அதாவது, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பாதித்த பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்ய மூத்த அமைச்சர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சேகர் மாபு, மா.சுபிரமணியன் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.