சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 46,584 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தார்.
அடுத்த 18 மாதங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19,260 பணியிடங்களும், 17,595 பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி மூலமாகவும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6,688 பணியிடங்களும், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3,041 பணியிடங்கள் என மொத்தமாக 46,584 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதைத் தவிர சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளில் காலியாக இருக்கக் கூடிய 30,219 அரசு பணியிடங்களும் நிரப்பப்படும். இவற்றை மொத்தமாக சேர்த்து பார்க்கையில் 75,000-த்திற்கும் மேற்பட்ட அரசுப்பணியிடங்கள் வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் எனவும் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் பேசிய மு.க.ஸ்டாலின் ” அடுத்த தேர்தலை பற்றி யோசிக்கும் அரசு இல்லை அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கும் அரசு இது. கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 65,483 இளைஞர்களுக்கு அரசு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது, 5.08 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது” எனவும் சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ... சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…