2026க்குள் 46,584 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்! முதலமைச்சர் அறிவிப்பு!!

mk stalin

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  அதன்படி, வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 46,584 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தார்.

அடுத்த 18 மாதங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19,260 பணியிடங்களும், 17,595 பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி மூலமாகவும்,  தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6,688 பணியிடங்களும், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3,041 பணியிடங்கள் என மொத்தமாக 46,584 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதைத் தவிர சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளில் காலியாக இருக்கக் கூடிய 30,219 அரசு பணியிடங்களும் நிரப்பப்படும். இவற்றை மொத்தமாக சேர்த்து பார்க்கையில் 75,000-த்திற்கும் மேற்பட்ட அரசுப்பணியிடங்கள் வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் எனவும் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் பேசிய மு.க.ஸ்டாலின் ” அடுத்த தேர்தலை பற்றி யோசிக்கும் அரசு இல்லை அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கும் அரசு இது. கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 65,483 இளைஞர்களுக்கு அரசு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது, 5.08 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது” எனவும் சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்