சென்னை குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு.! நிவாரணம் அறிவித்தார் தமிழக முதல்வர்.!

Default Image

சென்னை மூவரசம்பட்டு குளத்தில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

பங்குனி உத்திர நாளை முன்னிட்டு சென்னை. மூவரசம்பட்டு பகுதி கோவில் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்வின் போது, குளத்தில் மூழ்கி 5 தன்னார்வல இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

பிரேத பரிசோதனை :

அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு தற்போது குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளது. குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் அன்பரசன் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

2 லட்ச ரூபாய் நிவாரணம் :

இந்நிலையில், குளத்தில் மூழ்கி உயிரிழந்த தன்னார்வல இளைஞர்கள் குடும்பத்தாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது சம்பவம் நடைபெற்ற சென்னை மூவரசம்பட்டு குளத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவால் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்