வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம்.! முதல்வர் அறிவிப்பு.!
பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரண தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பச்சைமலையான்கோட்டை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு கடையில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஜெயராமன் மற்றும் அவரது மனைவி நாகராணி ஆகியோர் உயிரிழந்தனர்.
அதே போல, விருதுநகர் மாவட்டம் கணிஞ்சம்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரவி என்பவர் உயிரிழந்துள்ளார். எதிர்பாராமல் நடந்த இந்த விபத்து குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரண தொகையாக அளிக்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.