Northeast Monsoon : நெருங்கும் வடகிழக்கு பருவமழை… அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவுகளை கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.! 

Tamilnadu CM MK Stalin

இன்னும் சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை நெருங்க உள்ளதால் அதனை எதிர்கொள்ளும்  நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகள் உடல் இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார் . இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, வருவாய் துறை செயலாளர் ,  அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கி ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது இறுதியாக அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகள், உத்தரவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அவர் கூறுகையில், வடகிழக்காடு பருவமழை நெருங்க உள்ள காரணத்தால், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலர், வருவாய் நிர்வாக ஆணையர், மற்ற துறைரீதியிலான அதிகாரிகள் விளக்கம் அளித்தார்கள் என்றார்.

அடுத்து, நமது அரசின் சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டு மழைக்காலத்தில் பெரிய அளவிலான சேதம் ஏற்பாடாமல் தவிர்த்தோம். அதே போல இந்தாண்டும் நடவடிக்கைகளை சிறப்பாக கையாள வேண்டும். உட்கட்டமைப்புகளை பலப்படுத்துதல், தகவல் பரிமாற்றத்தை பலப்படுத்துதல், பேரிடர் கால பயிற்சி, மீட்பு பணிகள் குறித்து பொதுமக்களுக்கு பயிற்சி, துல்லியமான வானிலை அறிக்கைகளை சரியாக பெறுவது.

மழை பாதிக்கும் இடங்கள் குறித்து நில வரைபடங்கள், பேரிடரை கட்டுப்படுத்த சிறப்பு திட்டம், பொதுமக்களுக்கு உரிய அறிவுரை, அனைத்து வித பேரிடர் மேலாண்மை வாரியத்தின் ஆயத்தம், மீட்பு பணிகள், சீரமைப்பு பணிகள், திறன் மேம்பாடு பணிகள், உயிரிழப்புகள், பொது சொத்து சேதமதை தவிர்த்தல், அரசு வருவாயை இழக்காமல் இருக்க நடவடிக்கை, உள்ளிட்டவைகளை ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வரும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரையில் வழக்கமாக சராசரியாக 443 மில்லி லிட்டர் மழை பெய்யும். இது வருடாந்திர மழை அளவில் 48 விழுக்காடு ஆகும். கிடைக்கப்பெறும் பருவமழையின் பயனை முழுதாக பெற திட்டமிடப்பட்டுளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தலைமை செயலர் சிவதாஸ் மீனா தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுளளன. புயல், கனமழை, வெல்ல பாதிப்புகளை கண்டறிந்து தற்போது அதன் சேதத்தை குறைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் .

மாநில அவசரகால கட்டுப்பாடு மையம், மாவட்ட அவசரகால கட்டுப்பாடு மையம் ஆகியவை பருவமழை காலத்தில் 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். மக்கள் இலவச உதவி எண்  1070, 1077 ஆகியவற்றை தொடர்புகொண்டு பேசலாம். பொதுவான எச்சரிக்கைகளை அச்சு அறிவிப்பு, சமூக வலைதளங்கள் மூலமாகவும் அறிவிக்க வேண்டும்.

பொதுமக்கள் பாதுகாப்ப தங்கவைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். கனமழை பாதிப்புள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தமிழக்த்தில் பல்வேறு இடங்களில்  சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன. இது ஏற்புடையது அல்ல. மாவட்ட நிர்வாகம் இதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

இந்த வாரத்தில் சென்னையில் நேரடி ஆய்வு மேற்கொள்ள உள்ளேன். இனி வரும் ஆய்வு காலங்களில் நேரடியாக களஆய்வு மேற்கொள்ள உள்ளோம். திட்டமிட்ட பணிகளை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும். பருவமழை காலங்களில் மாவட்டந்தோறும் அனைத்து துறைகளும் ஒன்றிணைத்து ஒத்திகை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொது சொத்துக்கள், உயிர் சேதங்களை தவிர்க்க அனைவரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த ஆலோசனை கூட்ட முடிவில் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala