சிறுமி டானியாவுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பில் வீடுமனை பட்டா வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

Tania

சிறுமி டானியாவுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பில் வீடு கட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வீராபுரத்தில் வசிக்கும் ஸ்டீபன்-சௌபாக்யா தம்பதியின் மகள் சிறுமி டானியா, இவருக்கு வயது 9. இவர் அரிய வகை முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இது தொடர்பான செய்திகள் வெளியான நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுமிக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கோள்ளுமாறு உத்தரவிட்டார்.

அதன்படி அவருக்கு தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனையில் கடந்த வருடம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறுமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தற்போது சிறுமி நலமுடன் உள்ள நிலையில், மகிழ்ச்சியுடன் பள்ளிக்கும் சென்று வருகிறார்.

இந்நிலையில், சிறுமி டானியாவுக்கு பாக்கம் கிராமத்தில் ரூ. 1.48 லட்சம் மதிப்புள்ள பட்டா நிலத்தை வழங்கி, அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்