முதல்வர் மு.க.ஸ்டாலின் 7,740 புத்தகங்களை தமிழ்நாடு அரசின் பொது நூலகங்களுக்கு வழங்குகிறார்…!

Tamilnadu CM MK Stalin

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனக்கு வழங்கப்பெற்ற 7,740 புத்தகங்களை தமிழ்நாடு அரசின் பொது நூலகங்களுக்கு வழங்குகிறார்.

சென்னை, நங்கநல்லூர், நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளில் (15.7.2023) நடைபெறவுள்ள விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனக்கு வழங்கப்பெற்ற 7,740 புத்தகங்களை தமிழ்நாடு அரசின் பொது நூலகங்களுக்கு வழங்குகிறார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், கடந்த 2017-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்றத்திலிருந்தும், 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றப் பிறகும், தன்னைச் சந்திக்க வருபவர்கள், பூங்கொத்துகள், பொன்னாடைகளைத் தவிர்த்து, அன்பின் பரிமாற்றத்திற்கு அடையாளமாக புத்தகங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி, தன்னைச் சந்திக்க வந்த பலரும் வழங்கிய ஒன்றரை லட்சம் அறிவார்ந்த புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கும், புத்தகங்கள் கோரிக் கடிதம் அளித்தவர்களுக்கும், அமைப்புகளுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கியுள்ளார். அதன் தொடர்ச்சியாக, பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளையொட்டி நாளை (15.7.2023) சென்னை, நங்கநல்லூர், நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சமீபகாலங்களில் தனக்கு வழங்கப்பட்ட 7,740 புத்தகங்களை, தமிழ்நாடு அரசின் பொது நூலகங்களுக்கு வழங்குகிறார்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்