எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ் பெண்ணுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!

MKStalin

எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முத்தமிழ்ச்செல்வி என்ற முத்த தமிழ் பெண்ணிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி என்ற பெண் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைய வேண்டும் என்று ஆசை கொண்ட இவர் அதற்கு நிதி தேவைப்பட்ட காரணத்தினால் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு அவரது பயணத்துக்கு கழக அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.25 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி இருந்தது. இந்நிலையில் எவரெஸ்ட் சிகரத்தை உச்சியை அடைய தனது பயணத்தைத் தொடங்கிய முத்தமிழ்செல்வி எவரெஸ்ட்டின் அதிகபட்ச உயரத்தை எட்டி சாதனை படைத்துள்ளார்.

தற்போது, எவரெஸ்ட்டில் ஏறிவிட்டு திரும்பியுள்ள தமிழகத்தை சேர்ந்த முத்தமிழ்செல்விக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். எல்லோருக்கும் சாதனை படைத்து, தாங்களே ‘முதல்’ என முத்திரை பதித்திட வேண்டும் என்ற எண்ணம் உண்டு. மேலும், பல பெண்கள் சாதனை படைக்க முத்தமிழ்ச்செல்வி ஊக்கமாக விளங்கட்டும் என்றும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மே இரண்டாம் வாரத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறத்தொடங்கியவர் தற்போது தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்