பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
MK Stalin: பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழகம் முழுவதும் நாளை தொடங்குகிறது. மாநிலம் முழுவதிலும் உள்ள 3,302 மையங்களில் 7.25 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடங்கி மார்ச் 22-ம் தேதி நடைபெற உள்ளது.
Read More – தூத்துக்குடி மக்களின் போராட்டத்தின் வெற்றி: ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து கனிமொழி கருத்து
முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில். “பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நாளை எழுத உள்ள மாணவர்களுக்கும் மாணவியர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்! உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான +2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள்.
Read More – ஸ்டெர்லைட் ஆலை வழக்கு… வேதாந்தா மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்..!
நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன். தேர்வு என்பது மற்றுமொரு கல்வியியல் நடைமுறைதானே தவிர, அதுவே உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது. எனவே எவ்விதப் பதற்றமும் வேண்டாம். பெற்றோர்களும் இதனை நன்கு உணர்ந்து தங்களது குழந்தைகள் மீதான தேவையற்ற அழுத்தங்களைத் தவிர்த்து, அவர்களது வெற்றிக்கு ஊக்கமளிக்க வேண்டும்!” என பதிவிட்டுள்ளார்.