சரித்திரம் படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், “சரித்திரம் படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது! உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்காக முதல் தங்கத்தை வென்ற நீரஜ்சோப்ராவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், “உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் அற்புதமான சாதனைகள் இந்திய விளையாட்டுகளை உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.” என்றும் கூறியுள்ளார்.