தமிழக முதல்வராக பொறுப்பேற்றது முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம்.
அதேபோல், அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள், அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொள்வார். திட்டத்தின் செயல்பாடு தாமதமாக இருந்தால் அதற்கான காரணத்தையும் தெரிந்துகொண்டு அதனை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்வார்.
இந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறார். இந்த நிலையில் முதல்வர் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி செங்கல்பட்டில் முதல் வருகையை முன்னிட்டு, இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பெருமாள் கோயில், மறைமலை நகர், காட்டாங்குளத்தூர் உள்ளிட்ட பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் தலைமையில் இன்று மறைமலைநகர் அருகே ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…