பாத்திமா பீவி மறைந்தார் என்றறிந்து வருந்துகிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

Fathima beevi

உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும், தமிழக முன்னாள் ஆளுநருமான பாத்திமா பீவி (96) உடல்நல குறைவு முதிர்வு காரணமாக இன்று காலமானார். கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி பாத்திமா பீவி சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார்.

1927ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் பிறந்த பாத்திமா பீவி, திருவனந்தபுரம் மகளிர் கல்லூரியில் வேதியியலில் பட்டமும், பின்னர் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் முதல் வகுப்பில் தங்கப் பதக்கத்துடன் பட்டம் பெற்றார். எனவே, உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:

அந்தவகையில், நீதிபதி பாத்திமா பீவி மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், உச்சநீதிமன்ற நீதிபதியான முதல் பெண்மணி என்ற பெருமைக்கு உரியவருமான பாத்திமா பீவி அவர்கள் மறைந்தார் என்றறிந்து வருந்துகிறேன்.

உச்சநீதிமன்ற நீதிபதி, தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர், கேரள பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர், தமிழ்நாடு ஆளுநர் எனப் பல உயர் பொறுப்புகளில் பணியாற்றியுள்ள பாத்திமா பீவி அவர்களது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இதுபோன்று, பாத்திமா பீவி மறைவிற்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

டிடிவி தினகரன்: 

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும், தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநருமான பாத்திமா பீவி அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார் என்ற செய்தி வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை அறிக்கை..!

அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தின் போது தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி வகித்த பாத்தீமா பீவி அவர்கள் அரசுடன் இணக்கமாக செயல்பட்டு தமிழக மக்களின் நலனுக்கான கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றியதையும் இந்த நேரத்தில் நினைவுகூறுகின்றேன்.

நீதித்துறையின் உயர்மட்ட பதவிகளில் பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க தொடர்ந்து போராடி, சமத்துவமிக்க நீதியின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்த பாத்திமா பீவி அவர்கள் ஆற்றிய பணிகள் இந்திய நீதித்துறை வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும் என கூறியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்: 

உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமைக்குரியவரும், தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின்மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவருமான நீதியரசர் எம். பாத்திமா பீவி அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். நீதியரசர் பாத்திமா பீவி அவர்களை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்