காலை உணவு திட்டம் குறித்து பொறுப்பாளரிடம் கேட்டறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
காலை உணவு வழங்கும் திட்டம் குறித்து,பொறுப்பாளர் மணிமேகலையிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கடந்த 15-ஆம் தேதி மதுரை ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து, கடந்த 16-ஆம் தேதி, மதுரை தவிர்த்து இதர 37 மாவட்டங்களில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. 37 மாவட்டங்களிலும் மாவட்ட அமைச்சர்கள், ஆட்சியர்கள், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மன்னார்குடி நகராட்சி மாதிரி தொடக்கப் பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் குறித்து,பொறுப்பாளர் மணிமேகலையிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.