இளம் வயதில் வரலாறு படைத்த குகேஷுக்கு ரூ.5 கோடி பரிசு… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷுக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற குகேஷுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.5 கோடி பரிசுத் தொகை அறிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள குகேஷுக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்க வேண்டுமென துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதனையேற்று, குகேஷை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அவருக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், டிங் லிரேனை வீழ்த்திய குகேஷுக்கு பதக்கத்துடன் ஏற்கெனவே, ரூ.11.45 கோடி பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. டி.குகேஷ் அவர்களுக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin pic.twitter.com/MtmyFXmuz0
— TN DIPR (@TNDIPRNEWS) December 13, 2024
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் (FIDE World Championship 2024) 14ஆவது சுற்றில் 58ஆவது காய் நகர்த்தலில், நடப்பு சாம்பியனான சீன வீரர் டிங் லிரேனை குகேஷ் வீழ்த்தினார். 13 சுற்றுகள் முடிவில் இருவரும் 6.5 புள்ளிகள் எடுத்திருந்த நிலையில், இறுதிச்சுற்றில் அபாரமாக விளையாடி வென்றார் தமிழகத்தின் 18 வயதுடைய குகேஷ்.
இதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு, உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய இளம் வீரர் குகேஷ் ஆவார். தற்போது, மிக இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று வாகைசூடிய குகேஷுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வண்ணம் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025