‘நாளை அரிட்டாபட்டி வருகிறேன்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!
டங்ஸ்டன் சுரங்க ஏல உரிமை ரத்து செய்யப்பட்ட நிலையில், அரிட்டாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி கூறினர்.
மதுரை : மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுற்று வட்டாரத்தில் உள்ள 48 கிராம மக்களுக்கு போராட்டம் நடத்தி வந்தனர். தமிழ்நாடு சட்டசபையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்களும் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஜன.23ம் தேதி ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டது. போராட்டம் வெற்றி அடைந்ததை கொண்டாடும் வகையில் இனிப்புகளை வழங்கி கிராம மக்கள் கொண்டாடினர்.
இதற்காக நாளை (ஜன.26) பாராட்டு விழா நடைபெற உள்ளது. மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் நாளை நடைபெறவுள்ள நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில், பங்கேற்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம மக்கள் அழைப்பு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.
டங்ஸ்டன் சுரங்க ஏல உரிமை ரத்து செய்யப்பட்ட நிலையில், அரிட்டாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி கூறினர். இந்நிலையில், “உங்கள் அன்பை ஏற்க நாளை அரிட்டாபட்டி-க்கு வருகிறேன்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அன்பை ஏற்க நாளை #அரிட்டாபட்டி-க்கு வருகிறேன்! #Tungsten pic.twitter.com/OV1db5dXGc
— M.K.Stalin (@mkstalin) January 25, 2025
இதனிடையே, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த உறுதியான நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் மதுரை மாவட்ட அரிட்டாபட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் “தான் முதலமைச்சர் பதவியில் இருக்கும் வரையிலும் டங்க்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டேன் என சூளுரைத்து, சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றி மக்களின் போராட்டம் வெற்றியடைய உறுதுணையாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை அரிட்டாப்பட்டி கிராம மக்கள் ஒட்டியுள்ள போஸ்டர் pic.twitter.com/UgFnlggyzv
— Prabhu Chandran (பாச.பிரபு) (@PasaPrabhu) January 25, 2025