பட்டாசு ஆலை விபத்து.! உயிரிழந்தோர், காயமடைந்தோருக்கு நிவாரண தொகை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த பெண்ணிற்கு நிவாரண உதவியை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கடலூர் புதுச்சேரி சாலையில் உள்ள சிவனார்புரத்தில் செயல்பட்டு வந்த தனியார் நாட்டு பட்டாசு ஆலையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், 9 பேருக்கு தீ காயம் ஏற்பட்டது. புதுச்சேரியை சேர்ந்த மல்லிகா எனும் பெண் தீ விபத்தில் உயிரிழந்துவிட்டார்.
இருவர் கைது : இந்த சம்பத்துவத்தை அடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சேகர் மற்றும் அவரது மனைவி கோசலா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
முதல்வர் நிதியுதவி : இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த மல்லிகா குடும்பத்தாருக்கு 3 லட்சம் ரூபாம் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த மல்லிகா குடும்பத்தாருக்கு தனது இரங்கலையும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் நிவாரண நிதி : மேலும், காயமடைந்த 9 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் அறிவிக்கப்ட்டுள்ளது. இந்த நிதியுதவி முதல்வர் நிவாரண நிதியில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.