காவல்துறை உயர் அதிகாரிகள் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட வாரியாக சட்ட ஒழுங்கு பற்றி ஆலோசனை மேற்கொண்டார்.
கள ஆய்வில் முதல்வர் எனும் திட்டத்தின் கீழ் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறும் அரசு திட்டங்கள் தொடர்பாக முதல்வர் இன்றும் நாளையும் முக்கிய அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இன்று காலை சேலம் வந்ததும் ஓமலூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
ஆட்சியர்களோடு ஆலோசனை : அதனை தொடர்ந்து சேலத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் ஈரடுக்கு நவீன பேருந்து நிலையத்தை முதல்வர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அதன் பிறகு, தற்போது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களோடு ஆலோசனை மேற்கொண்டார்.
நான் முதல்வன் : அதில் அந்தந்த மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களின் திறனை மேம்படுத்த அறிமுகப்படுத்தப்பட நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையில் தெறிந்து கொண்டார். அந்த மாணவர்களுக்கு உரிய சலுகைகள் கிடைக்கிறதா? சிறப்பு முகாம்கள் மூலம் எத்தனை மாணவர்கள் பயன்பெற்றார்கள் என்பது குறித்தும் ஆலோசித்தார்.
சட்டம் – ஒழுங்கு ஆலோசனை : அதனை அடுத்து தற்போது சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளோடு கலந்தாலோசித்து வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு சைலேந்திர பாபு, சட்டம் ஒழுங்கு உயர் அதிகாரி ஷங்கர், மேற்கு மண்டல காவல் துறை அதிகாரி சுதாகர், சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி , சேலம் மாநகர் காவல் ஆணையர் நஜ்முல் ஹோதா ஆகிய முக்கிய காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…