உலகத்தரம் வாய்ந்த பூங்காக்களில் ஒன்று வண்டலூர் உயிரியல் பூங்கா.! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.!
வண்டலூர் உயிரியல் பூங்கா உலகத்தரம் வாய்ந்த பூங்காகளில் ஒன்றாக இருக்கிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஆண்டுக்கு 20 லட்சம் சுற்றுலாவாசிகள் வருகின்றனர். – முதல்வர் ஸ்டாலின் பேச்சு.
தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து பேசினார்.
அவர் பேசுகையில், வண்டலூர் உயிரியல் பூங்கா உலகத்தரம் வாய்ந்த பூங்காகளில் ஒன்றாக இருக்கிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஆண்டுக்கு 20 லட்சம் சுற்றுலாவாசிகள் வருகின்றனர். என பெருமையாக பேசினார்.
மேலும், தமிழகத்தில் உள்ள மற்ற உயிரியல் பூங்காக்களின் கட்டமைப்புகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் கூறினார். வன உயிரின பூங்காவுக்கு வரக்கூடிய மக்களுக்கு, வன உயிரின பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், உயிரியல் பூங்காவில் உள்ள வன உயிரினங்களுக்கு சாதகமான சூழலை நாம் ஏற்படுத்த வேண்டும். எனவும், உயிரியியல் பூங்கா கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.