சிறு குறு தொழில் துவங்க திமுக ஆட்சி என்றும் துணையாக இருக்கும்.! முதல்வர் மு.க. ஸ்டாலின் உரை.!

Tamilnadu CM MK Stalin

சென்னையில் நடைபெற்ற சிறு குறு பன்னாட்டு தொழில் நிறுவன நாள் நிகழ்ச்சியில்  முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். 

இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் , சிறு குறு நடுத்தர பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வசதி, நினைவு பரிசு உள்ளிட்டவை வழங்கினார்.

இதனை தொடர்ந்து அந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பற்றி குறிப்பிட்டார். தற்போது, புதியதாக தொழில் துவங்கும்சிறு குறு நிறுவனங்களுக்கு 24.24 லட்சம் மானியத்துடன் 45 கோடி ரூபாய் வரையில் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் 100 பயனாளிகளுக்கு ஒப்புதல் இன்று வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு MSMEக்கு (சிறு குறு நடுத்தர தொழில்) தனி கவனம் செலுத்தி வருகிறது. ஓய்வுபெற்ற அரசு அதிகாரி சுந்தரத்தேவன் தலைமையில் இதனை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து குழு ஆய்வறிக்கை அடிப்படையில் சிறு குறு தொழில் நிறுவனங்ள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே தோள்கொடுப்போம் தொழில் வளர்ப்போம் என மதுரையில் திட்டம் துவங்கப்பட்டது.

27 அரசு  துறைகளிடம் இருந்து வாங்க வேண்டிய அனுமதியை ஒரே ஒரு இணையதளம் மூலம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் , 11 ஆயிரம் பேருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், 1903 விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் முதல்வர் கூறினார்.

தமிழகத்தில் இதுவரை 6 தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் மேலும் 6 நகரங்களில் தொழிற்பேட்டை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு தாங்கும் விடுதி கட்டிதர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில், சென்னை, கோவையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

 2016முதல் 2021 வரை காலகட்டத்தில் துவங்கப்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையை விட தற்போது திமுக 2ஆண்டுகால ஆட்சியில் இரண்டு மடங்கு அதிகம் எனவும், MSMEயில் தொழில் வளர்ச்சிக்கு விருது பெற்ற நிறுவனங்களுக்கு வாழ்த்துக்கள். அதற்கு தடையில்லாமல் கடன் கொடுத்த சிறந்த 3 வங்கிகளுக்கு வாழ்த்துக்கள் என்றும், சிறுகுறு தொழில் துவங்க திமுக ஆட்சி துணையாக இருக்கும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்